சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஜெர்மனி நாட்டு தூதரகத்துக்கு இவர் கடந்த வாரம் வந்தார். அங்கிருந்த அதிகாரிகளை சந்தித்து, ஜெர்மனி செல்ல விசா வழங்கக்கோரி ஆவணங்களை சமர்ப்பித்தார்.

ஆனால், ஆவணங்களை சோதித்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதில், ஒரு சில ஆவணங்கள் போலி என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து, அபிராமபுரம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முதலில் ஜீஜீயை விசாரணைக்காக அழைத்தனர். அவரும் நேற்று முன்தினம் மாலை விசாரணைக்கு ஆஜரானார்.

விசாரணையில், போலி ஆவணங்கள் அளித்ததை ஜீஜீ ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்தனர். ஜெர்மனியில் உள்ள ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருவதாக, ஜெர்மனி தூதரக அதிகாரிகளிடம் ஜீஜீ போலி ஆவணம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோன்று போலி ஆவணங்கள் சமர்ப்பித்து வெளிநாடு செல்ல முயன்றதாக 13 பேர் கைதாகி உள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் இதே சம்பவத்தில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.