இந்தி நடிகை கரீனா கபூருக்கு மும்பையில் உள்ள பிரீச் கேன்டி ஆஸ்பத்திரியில் இன்று காலை 7 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

கரீனா கபூர் கடந்த 2012 &ம் ஆண்டில், இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், அவர் கர்ப்பமானார். அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. நிறை மாத கர்ப்பமாக இருந்த அவரை பிரசவத்துக்காக மும்பை பிரீச் கேன்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு அவருக்கு இன்று காலை 7 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு, ’தைமுர் அலிகான் பட்டோடி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். குழந்தை பிறந்தது பற்றி கரீனா கபூர்-சயீப் அலிகான் ஆகிய இருவரும் மகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது:

”எங்களுக்கு ஒரு அழகான மகன் பிறந்து இருக்கிறான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் குழந்தைக்கு தைமுர் அலிகான் பட்டோடி என்று பெயர் சூட்டியிருக்கிறோம். கடந்த 9 மாதங்களாக எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் நலம் விரும்பிகளுக்கு குறிப்பாக ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்.”