பன்னீர்செல்வம் மீண்டும் ஆட்சி நடத்த வேண்டும் கமல்ஹாசன்

இன்றைய அரசியல் சூழ்நிலையில் யார் தமிழக முதல்-அமைச்சராக இருக்க வேண்டும் என்பது குறித்து பல பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்

கலைத்துறையை சார்ந்த வர்களும் பல்வேறு கருத்துக் களை தெரிவித்துள்ளனர். இது பற்றி நடிகர் கமல்ஹாசன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழக கவர்னரே இறுதி முடிவு எடுப்பார்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

நான் பன்னீர்செல்வத்தின் நண்பனும் அல்ல. எதிரியும் அல்ல. ஓ. பன்னீர்செல்வம் திறமை அற்றவர் அல்ல. ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவர் திறமையாக வெற்றி கண்டுள்ளார். அவர் மீண்டும் முதல்வராக ஆட்சி செய்ய  வேண்டும். ஜனநாயக ரீதியாக எனது விருப்பம் இதுதான்.

சசிகலாவின் தகுதிபற்றி எனக்கு தெரியாது.  அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் செய்தது கிடையாது. ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகள் அவர் உடன் இருந்தார் என்பதை அரசியல் தகுதியாக கருத முடியாது. சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.