அரசியல் வாரிசு என்று ஜெயலலிதா யாரையும் அடையாளம் காட்டவில்லை என முதல்-அமைசசர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்

அனைத்து எம்.எல்.ஏக்களும் எனக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.ஜெயலலிதாவின் மனசாட்சி படியே அனைத்து எம்.எல்ஏக்களும் செயல்படுவார்கள்.யாருடன் இருக்க வேண்டும் யாருடன் இருக்க கூடாது என மூத்த நிர்வாகிகளுக்கு ஜெயல்லைதா கூறி உள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவர்கள் அளித்த பதில் மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. மக்களின் சந்தேகத்தை போக்கும் பொறுப்பில் நான் இருக்கிறேன். உண்மை தெரிய வேண்டும் என்பதற்காக விசாரணை கமிஷன் பற்றி கூறினேன்.

என்னால் கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்த பங்கமும் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். நீங்களாவது என்னிடம் விசுவாசமாக இருங்கள் என கூறிய போது எனக்கு கண்ணீரே வந்தது.

ஜெயலலிதா என்மீது இருந்த பாசத்தில் முதல்-அமைச்சராக்கினார். ஜெயலலிதாவின் கொள்கைகளை நிறைவேற்றும் வகையில் என் பணி இருக்கும். அ.தி.மு.க.வில் விரிசல் உருவாக நான் காரணம் இல்லை.அரசியல் வாரிசு என்று ஜெயலலிதா யாரையும் அடையாளம் காட்டவில்லை

பொதுசெயலாளர் பொறுப்பில் இல்லாமல் எம்.ஜி.ஆர் முதல்-அமைச்சராக இருந்து உள்ளார். 100க்கு 200 சதவீதம் நான் தலைமைக்கு விசுவாசமாக இருந்து உள்ளேன்.

எதிர்மறையாக அரசியல் நடத்தும் தி.மு.கவும், பாரதீய ஜனதாவும் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள் என்பது தவறானது.நான் யாருடனும் தொடர்பில் இல்லை.

மும்பை சென்று கவர்னரை சந்திக்கும் திட்டம் இல்லை. சென்னைக்கு அவர் வரும் போது சந்திப்பேன்

சசிகலா பதவி ஏற்பதில் தாமதம் ஆவது பற்றி கவனர்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை இருந்தாலும் சில கேள்விகளுக்கு இன்னும்  பதில் தேவையாக  உள்ளது.