தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திடீரென தியான நிலையில் 40 நிமிடம் அமர்ந்திருநதார்.

இரவு சுமார் 9 மணிக்கு, திடீரென சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றார். எந்த ஒரு நிகழ்வும் இல்லாத நிலையில், திடீரென இரவு நேரத்தில் அவர் அங்கு சென்றது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது