தமிழ் சினிமாவில் தான் விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன் என்றும், ஜெயிப்பேன் என்றும் சரவணன் இருக்க பயமேன் படத்தில் நடித்திருக்கும் ரெஜினா கூறியிருக்கிறார்.

சமந்தாவை போலவே ரெஜினாவும் தமிழ்நாட்டில் பிறந்தவர். என்றாலும், தமிழைவிட தெலுங்கு படங்களிலேயே அதிகமான நடித்து இருக்கிறார்.

சமீபத்தில், ரெஜினா நடித்து வெளியான ‘மாநகரம்‘ படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத் திருக்கிறது. உதயநிதியுடன் ரெஜினா நடித்துள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் திரைக்கு வந்து இருக்கிறது. இது தவிர ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘சிலுக்குவார் பட்டி சிங்கம்’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, ‘ராஜ தந்திரம் -2’ , ஆகிய படங் களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.