தமிழகத்தில் உடனியாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

500 டாஸ்மாக் மூடல், ஸ்கூட்டர் மானியம் முதல்வர் பழனிச்சாமி

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுதந்திரமாக செயல்பட வேண்டும். 500 மதுக்கடைகள் உடனடியாக மூடப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன்.தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

மக்களின் ஆதரவோடு ஆட்சி அமைக்க திமுக விரும்புகிறது

பாலியல் வன்கொடுமையை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்,சட்டசபை நிகழ்வுகள் மீதான எதிர்க்கட்சிகளின் போராட்டம் நியாயமானது. ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடும்.