Tamilisai, Tamilisai Soundararajan Contact Number, Tamilisai Soundararajan Comedy, Tamil Isai Soundararajan Father Name, Tamilisai Soundararajan Memes, Tamilisai Soundararajan Husband Photos, Tamilisai Soundararajan Date Of Birth, Tamilisai Soundararajan Age, Tamilisai Soundararajan Son

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தின் முடிவில் உணவகங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 18 மற்றும் 12 சதவீதம் என்பதிலிருந்து 5 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்பட்டது. இந்த நடைமுறை கடந்த 15ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்தது.

இதனால் உணவு பொருட்களின் விலை குறையும் என கூறப்பட்டது. எனினும், சில உணவகங்களில் விலை குறைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி குறைப்பிற்கு பின் உணவகங்களில் விற்கப்படும் உணவு பொருட்களின் விலையை ஆய்வு செய்யும் பணியில் பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இறங்கினார்.

அவர் உணவகம் ஒன்றில் 2 இட்லி, ஒரு வடை சாப்பிட்டு பில் செலுத்தி ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, ஜி.எஸ்.டி. வரியை குறைத்த பின்னர் உணவகங்கள் உணவு விலையை குறைக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.