அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13ஆவது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்

*போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை அரசு ஈடுசெய்ய வேண்டும்.

*போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 13-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்கிட வேண்டும்.

*தொழிலாளர்களது பணம் சுமார் ரூ.4500 கோடியை போக்குவரத்து கழகங்கள் தவறாகக் கையாண்டு செலவு செய்துவிட்டன – இதை தொழிலாளர்கள் கணக்கில் செலுத்த வேண்டும்.

*ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட 12 ஊதிய ஒப்பந்தங்களில் ஒப்புக்கொண்டு நிறைவேற்றப்படாத ஒப்பந்த பிரிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

*ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஓய்வுக்கால பலன்கள் சுமார் ரூ.1700 கோடி நிலுவையை வழங்க வேண்டும் – மாதந்தோறும் தொடர்ந்து ஓய்வூதியம் வழங்குவதற்கு .ரூ.100 கோடி வழங்க வேண்டும்.

*2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களை நடைமுறையிலுள்ள போக்குவரத்து கழக ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ப்பதற்கான உறுதி வழங்க வேண்டும்.

*அரசு மற்றும் மாநில பொத்துறை ஊழியர்களைவிட போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதியம் குறைவாக உள்ளது – இந்த ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

*தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.