தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பேரணி நடை பெறும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ல் ஜெயலலிதா யாரையெல்லாம் கட்சியில் இருந்தும், போயஸ் கார்டன் வீட்டில் இருந்தும் வெளியேற்றினாரோ, அவர்கள் எல்லாம் இன்று போயஸ் கார்டனில் இருந்து அதிமுகவை இயக்கும் துர்பாக்கிய நிலை ஏற் பட்டிருக்கிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா குடும்பத்தி னரை ஜெயலலிதா கடைசிவரை கட்சியில் சேர்க்கவில்லை.

ஆனால், தற்போது சசிகலா குடும்பத்தின் ஆட்சிதான் பதவி யேற்றுள்ளது. இந்த ஆட்சியை நீக்கி ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க அவரது ஆன்மாவிடம் ஆசி பெற்றுள்ளோம். சபதம் ஏற்றுள்ளோம்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்பேன் எம்.எல்.ஏ நட்ராஜ்

அதிமுக எம்எல்ஏக்கள் அனை வரும் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப் பேரவை தொகுதி வாரியாக 17-ம் தேதி (இன்று) வாக்காளர் பேரணி நடைபெறும். பல எம்எல்ஏக்கள் அவர்கள் பக்கம் இருக்கின்றனர். ஆனால், ஏழரை கோடி தமிழக மக்களும் எங்களைத்தான் ஆதரிக்கின்றனர். எனவே, சிறிது காலத்தில் இந்த ஆட்சி தூக்கி எறியப்படுவது உறுதி.

தற்போது பதவியேற்றிருப்பது மக்கள் விரோத ஆட்சி. 1 சதவீத மக்கள்கூட விரும்பாத ஆட்சி. எனவே, இந்த ஆட்சியை அகற்றும் வரை நாங்கள் ஓயமாட்டோம். கடந்த 10 நாட்களாக எதுவும் முறையாக நடக்கவில்லை. இந்த ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் ஒவ்வொரு வரும் சபதம் ஏற்றுள்ளனர்.