எடப்பாடியை ஆதரித்து வாக்களித்த சசி ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,சக்திவேலுக்கு அவரது தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எம்.எல்.ஏ.,வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவரது வீட்டு முகப்பில் செருப்பு மாலை ஒன்றை அணிவித்து தொகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீஸார் விரைந்த வந்து செருப்பு மாலையை அகற்றி விட்டு, எம்.எல்.ஏ.,வீட்டிற்கு பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.