மோடிக்கு நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நேற்று பதவி ஏற்று கொண்டார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர். புதிய முதல்வராக பதவி ஏற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் வாழ்த்து

இதற்கு நன்றி தெரிவித்து மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார். அதில், ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்த அரசு முயற்சிகளை மேற்கொள்ளும். மாநில மேம்பாட்டிற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி என கூறப்பட்டுள்ளது.