சசிகலாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை கடந்த மாதம் அக்கட்சியினர் ஒரு மனதாக தேர்வு செய்தனர். அதன் பின்னர் சசிகலாவிற்கும், பன்னீர்செல்வத்திற்கு மோதல் ஏற்பட்டது.

சசிகலா: பெங்களூருவில் இருந்து தமிழக சிறைக்கு மாற்ற திட்டம்

இதில் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த உறுப்பினர்களை சசிகலா அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார். இந்நிலையில், பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அளித்திருந்தது.

அந்த கடிதத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தையும் முடக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் சசிகலாவிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்த நோட்டீசில் கூறியுள்ளதாவது: வரும் 28ம் தேதிக்குள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதனால் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி தப்புமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.