டாஸ்மாக் எதிராகப் போராடுவோர் மீது தாக்குதல் நடத்தக் கூடாது, வழக்குப் பதிவு செய்யக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

ஜி.கே வாசன் வெளியிட்ட அறிக்கையில்

கடந்த நாட்களில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள அழிஞ்சிகுப்பம் பகுதியில் மதுக்கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் செய்த பொது மக்கள் மீது காவல்துறையினர் அத்துமீறி தடியடி நடத்தியதும்மி கவும் கண்டிக்கத்தக்கது.

ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பில் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடும் பெண்கள் உட்பட பொதுமக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தவோ, வழக்குப் பதிவு செய்யவோ கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் தமாகாவைச் சேர்ந்த பிரேம்காந்தி உட்பட பொது மக்கள் பல பேர் படுகாயமடைந்துள்ளனர். இது மிகவும் வேதனையளிக்கிறது. மேலும் இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குறிப்பாக பெண்கள் உட்பட 10 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்து சென்றுள்ளனர்.