தி.மு.க., நடத்திய முழு அடைப்பு போராட்டத்தில், முழு அளவில் கட்சியினர் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து, மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், ஸ்டாலின், இன்று விசாரணை நடத்துகிறார்.

சென்னை, அறிவாலயத்தில், தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், இன்று காலை,10 மணிக்கு நடக்கிறது. இதில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து, அறிவாலயத்தில், துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சமீபத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த முழு அடைப்பு போராட்டத்தில்,திருச்சி, சென்னை தெற்கு, திருநெல்வேலி மேற்கு மாவட்டங்களில், 1,000த்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்று கைதாகினர்.

ஆனால், தென்மாவட்டங்களில், மிகக் குறைவான தொண்டர்களே கைதாகி உள்ளனர். இதனால், ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்தார். எனவே, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலர்களிடம், அதுபற்றி, ஸ்டாலின் இன்று விசாரணை நடத்த திட்டமிட்டுள் ளார். மேலும், தற்போது, 63 மாவட்டச் செயலர்கள்

உள்ளனர். அவர்களில் செயல்படாதவர்களை நீக்கி, 50 மாவட்டச் செயலர்களாக குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.