சென்னை: இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசால் விதிக்கப்பட்ட தடையை கண்டித்து இன்று திமுக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.கவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த அப்துல் ரகுமான், சுப வீரபாண்டியன் மற்றும் திமுக தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதை தான் மக்கள் சாப்பிட வேண்டுமா?  என  கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய  திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பு கொடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.