திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் உடனடியாக சென்னை வருமாறு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்: ஸ்டாலின்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை காலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

சட்டப்பேரவையை உடனடியாக கூட்டுமாறு முதல்வர், பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவையை உடனடியாக கூட்டுமாறு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.