சென்னை: சஸ்பெண்ட் ரத்து செய்யப்படும் வரை எஞ்சிய 10 தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் சட்டசபையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

சபையில் அமளியில் ஈடுபட்டதால் 79 எம்எல்ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 7 நாளுக்கான இந்த சஸ்பெண்ட் இன்றுடன் 5 வது நாளாகும். இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்படாத எம்எல்ஏ.,க்கள் நேரு, பூங்கோதை, கீதாஜீவன் உள்ளிட்ட 10 பேரும் அவையை இன்று முதல் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர் .

சஸ்பெண்ட் செய்ப்பட்டதால் அவைக்கு வர முடியாத நிலைக்கு சபாநாயகர் முடிவு ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனால் தாங்களும் அவைக்கு வரவில்லை என திமுக., கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார்.