தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவர் தனபால் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்போவதாக தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்

மே 14-க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும்: உயர்நீதிமன்றம்

இன்று காலையில் தலைமைச் செயலகத்திற்கு வந்த மு.க. ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசும்போது இந்தத் தகவலைத் தெரிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது சபாநாயகர் நடந்துகொண்ட முறை ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதால், அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கான கடிதத்தை பேரவையின் செயலர் ஜமாலுதீனிடம் அளித்ததாகவும் அதன் பிரதியை சபாநாயகரிடம் அளித்திருப்பதாகவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

மக்களின் கருத்தை எம்.எல்.ஏ.க்கள் கேட்டிருக்க வேண்டும்: திருப்பூர் எம்.பி.

சட்டப்பேரவையில் நடந்த மோதலில் ஸ்டாலினின் சட்டை கிழிந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் நடக்கும் விவாதங்கள் குறித்துக் கேட்டபோது, அதற்குத் தான் பதிலளிக்க விரும்பவில்லையென ஸ்டாலின் கூறினார்.