சென்னை: சென்னை மாவட்டத்தில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து வாட்ஸ்ஆப்பில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தரமில்லாத குடிநீர் கேன்கள், குளிர்பானங்கள், தரமற்ற தயிர், மோர் பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகள் குறித்து வாட்ஸ்ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம். கார்பைடு கல்வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் உள்ளிட்டவை தொடர்பாக புகார்களையும் தெரிவிக்கலாம்.

9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும், 044 – 23813095 என்ற அலுவலக எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். commrfssa@gmail.com என்ற இமெயில் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்.