கொலை மிரட்டல் கமிஷனர் அலுவலகத்தில் சி.ஆர்.சரஸ்வதி புகார்

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி இன்று பகல் 12.45 மணிக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். தனக்கு போனில் அதிக மிரட்டல்கள் வருவதாக ஒரு புகார் அளித்தார்.

500 டாஸ்மாக் மூடல், ஸ்கூட்டர் மானியம் முதல்வர் பழனிச்சாமி

இரவு 10 மணிக்கு மேல் எனக்கு தொடர்ந்து போனில் கொலை மிரட்டல் வருகிறது. ஆபாசமாகவும் பேசுகிறார்கள். வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து இந்த போன்கள் வருகின்றன. தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி நான் பேட்டி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆபாசமாக பேசி வருகிறார்கள்.

எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ.,வீட்டில் செருப்பு மாலை

என்னைப்போல முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா, மற்றும் நடிகை விஜயசாந்தி ஆகியோருக்கும் மிரட்டல் வருகிறது. போலீசார் இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.