ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் குழுவினர் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்.

சுமார் 5 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது, ஆட்சியமைக்க எடப்பாடி பழனிச்சாமி உரிமை கோரினார். எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு பட்டியலையும் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்தார்.

எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை : ஆளுநர் அலுவலகம்

இந்த சந்திப்பின் போது, செங்கோட்டையன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், அன்பழகன், சரோஜா, ராஜலட்சுமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், டி.டி.வி.தினகரன், தளவாய் சுந்தரம், சுந்தரம், ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பு முடிந்த பின்னர், பத்திரிகையாளர்களை சந்திக்காமல் கூவத்தூர் கிளம்பி சென்றனர்.