சென்னை: கட்டடத்தின் அருகில் கட்டட கழிவுகளை கொட்ட இருப்பதால் கட்டடம் இடிப்பு பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை தி நகரில் இருந்த சென்னை சில்க்ஸ் கடையில் தீப்பிடித்தது. இதனை தீயணைப்பு வீரர்கள் 32 மணி நேரம் போராடி அணைத்தனர். தீப்பிடித்தத்தில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சென்னை சில்க்ஸ் கட்டடமும் பலம் இழந்தது.

பயங்கர சத்ததுடன் சரிந்த சென்னை சில்க்ஸ் கட்டிடம்

இதனால் சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. கட்டடத்தை இடிக்க ராட்சத இயந்திரம் வரழைக்கப்பட்டது. அந்த பகுதியில் இருக்கும் மக்கள் வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும், கட்டடம் அருகே யாரும் நிற்க வேண்டாம் எனவும் போலீசார் மைக் மூலம் அறிவுறுத்தினர். சில காரணங்களால் கட்டடம் இடிக்கும் பணி இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலை கட்டடம் இடிக்கும் பணி துவங்கியது.  ராட்சத ஜா கட்டர் இயந்திரங்கள் மூலம் கட்டடம் மேல் இருந்து கீழாக இடிக்கப்பட்டு வந்தது. 2 அல்லது 3 நாட்களில் சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பகுதிக்கு மக்கள் யாரும் வர வேண்டாம் என போலீசார் கூறினார்.