சென்னை திருமங்கலம் – நேரு பூங்கா இடையேயான சுரங்க மெட்ரோ ரயில் சேவை இன்று துவங்கியது.

திருமங்கலத்தில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர். மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.

மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்: ராமதாஸ்

7.4 கி.மீ., தூரம் கொண்ட இந்த சுரங்க ரயில் பாதையில் 7 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. சென்னை வாசிகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் இந்த சுரங்க மெட்ரோ ரயில் மூலம் திருமங்கலத்தில் இருந்து நேரு பூங்காவுக்கு ஏழரை நிமிடத்தில் வந்து சேர முடியும். முதற்கட்டமாக, 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் பட்சத்தில் கூடுதல் ரயில் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.