Rain In Nellai, Heavy Rain In Tirunelveli, Tirunelveli Temperature Today, Papanasam Tirunelveli Weather, Weather In Tenkasi, Palayamkottai Weather, Vallioor Weather, Weather In Tiruchendur, Tirunelveli Weather Hourly
தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இந்நிலையில், சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, ஒரு குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது குமரிக்கடல் முதல் லட்சத்தீவு வரை பரவி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும். குறிப்பாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என கூறினார்.

இந்த நிலையில் தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது.  தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.