சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விவேகம்’. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வந்தது.

புதிய சாதனையை படைத்த அஜித் `விவேகம்’ டீசர்

மே 10-ம் தேதியோடு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டது. அதன்படியே பல்கேரியாவில் காட்சிப்படுத்த வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து சென்னை திரும்பியுள்ளது படக்குழு. சென்னையில் இன்னும் ஒரு சில காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டால் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால், இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு. ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில் இறுதிகட்ட பணிகளை முடித்து ஆகஸ்ட் 10-ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘விவேகம்’ படத்தின் டீஸர் இணையத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.