சென்னை: மாடு வளர்ப்பு தொழிலை முடக்குவதாக தான் பா.ஜ.க ஆட்சியின் நோக்கமாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு தடை விதித்து.

மாடுகள் வணிகத்தை சுரண்டி சில பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

ரஜினி யாருடன் கூட்டணி வைக்கக்கூடாது: திருமாவளவன்

மத்திய அரசு மக்கள் சார்ந்த அரசாக இல்லாமல் கார்ப்பரேட் அரசாக உள்ளது. மாட்டின் தோல், எலும்பு, கொம்பு, கறி ஆகிய அனைத்தும் ஏதேனும் ஒரு தொழிலுக்கு பயன்படுகிறது. மாடு வணிகம் குறித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை திரும்பப்பெறும் வரை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.