மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்கி வைப்பதற்காக சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு, கமலாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். கட்சியை பலப்படுத்துவது, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

வாட்ஸ்ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்: கலெக்டர் அன்புசெல்வன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை இன்று சந்திக்க உள்ளேன். மாநில அரசிற்கு தேவையான நிதிகளை மத்திய அரசு அளித்து வருகிறது. மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு வளர்ச்சி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. லஞ்சம், ஊழல் இல்லாமல் 3 ஆண்டுகளை பா.ஜ., அரசு நிறைவு செய்துள்ளது. அதிமுக.,வின் உட்கட்சி விவகாரங்களில் பா.ஜ., தலையிடாது. தமிழகத்தின் மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பா.ஜ.,வின் கைப்பாவையாக அதிமுக இருந்து வருவதாக கூறி திமுக தரம் தாழ்ந்த அரசியல் செய்து வருகிறது. மத்தியில் காங்., கூட்டணியில் இருந்த போது திமுக., என்ன காங்.,ன் கைப்பாவையாக இருந்ததா? உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தமிழக பா.ஜ., தயாராக உள்ளது. வருமான வரி சோதனைக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.