இயக்குனர் பாலாவின் புதிய படத்தில் நடிகை ஜோதிகா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிரம்மா இயக்கத்தில் மகளிர் மட்டும் படத்தில் நடித்து வரும் ஜோதிகா அடுத்ததாக இயக்குனர் பாலாவின் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.இப்படத்தை ஈஓஎன் ஸ்டுடியோஸ் (EON Studios) என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் பாலாவின் பி ஸ்டுடியோஸ் (B Studios) நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது.

நடிகர் கமல்ஹாசன் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பிரபல நாயகன் யார்? என்ற விவரம் இன்னும் ஒருசில தினங்களில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் துவங்கும் இப்படத்தினை பற்றிய விரிவான செய்திகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

சூர்யாவை வைத்து ‘நந்தா’, ‘பிதாமகன்’ போன்ற ஹிட் படங்களைக் கொடுத்த பாலா இப்படத்தின் மூலம் முதன்முறையாக ஜோதிகாவை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.