பாகுபலி 2 திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், தமனா, அனுஷ்கா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், ஆகியோர் நடிப்பில் 4 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது பாகுபலி 2. உலகம் முழுவதும் 9000 திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் ஒரு திரைப்படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்வது இதுவே முதல்முறையாக பார்க்கப்படுகிறது. படம் வெளியாவதற்கு முன்பே பாகுபலி 2-இன் சாட்டிலைட் உரிமம் 51 கோடி ரூபாய் விற்கப்பட்டுள்ளது. பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் மொத்தம் 450 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.