சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் இன்றைய கூட்டத்தில் சுற்றுலா, கதர் உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.

திமுக உறுப்பினர்களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற பல முறை கேட்கப்பட்டும் சபாநாயகர் தனபால் மறுத்து விட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர்களும் அவைக்கு செல்லாமல் புறக்கணித்துள்ளனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் அவைக்கு வரப்போவதில்லை என சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக உறுப்பினர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர் அமளியில் ஈடுபட்டு, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கடந்த வாரம் தி.மு.க., உறுப்பினர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.