சசிகலாவின் நடவடிக்கைகள் பெண் தாதாவை போல உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் இளங்கோவன் விமர்சித்துள்ளார். சசிகலா மீது ஏகப்பட்ட வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

சசிகலா என்று சொன்னாலே தமிழக மக்ள் முகம் சுழிக்கின்றனர் என்று சாடிய இளங்கோவன், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா ஏற்கனவே குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவைா முதல்வராக பதவியேற்க சொல்லாமல் ஆளுநர் கால அவகாசம் எடுத்து கொள்வதில் தவறில்லை என்று இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்றார். ஆனால் சசிகலாவோ சுமார் 90 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சிறைப்பிடித்து வைத்திருப்பதாக சாடியுள்ளார்.

4 சுவற்றுக்குள் தான் அவர்கள் சுதந்திரமாக உள்ளனர் என்றார். சசிகலாவுக்கோ, ஓ.பன்னீர்செல்வத்திற்கோ காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்காது என்றார். யாருக்கும் ஆதரவளிக்க போவதில்லை என ராகுல் காந்தியிடம் தெரிவித்து விட்டதாக தெரிவித்தார்.