சசிகலாவின் பினாமி அரசை வீழ்த்தும் வரை அறப்போராட்டம் தொடரும். எங்கள் அறப்போராட்டத்துக்கு தமிழக மக்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து பிரிவினரும் ஆதரவு தர வேண்டும். நாட்டை காப்பாற்ற, இந்த தமிழகத்தை காப்பாற்ற இந்த ஆட்சியை தூக்கி எறிய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என மு.க.ஸ்டாலின் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

யார் இந்த மாஃபா பாண்டியராஜன்?

திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு எவ்வளவு பின்னோக்கி சென்றது என்பது அனைவருக்கும் தெரியும். மீண்டும் ஜெயலலிதா முதல்வரான பிறகு ஒரு மாதம் தமிழகம் சிக்கி தவித்ததையும் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் உடல்நிலை பற்றி அரசு சுகாதாரத்துறை அமைச்சரோ, தலைமைச் செயலாளரோ அல்லது பிற அமைச்சர்களோ எதுவும் கூறவில்லை.

அண்ணா உடல் நிலை பற்றி காலையிலும் மாலையிலும் அறிக்கை தரப்பட்டது. எம்ஜிஆருக்கு உடல்நிலை சரியில்லாதபோதும் அறிக்கை தரப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவுக்கு இதை பின்பற்றவில்லை. அவர் மறைவு செய்தியில் கூட குழப்பம் ஏற்பட்டது. கொடியை இறக்கினார்கள், பிறகு மறுப்பு தெரிவித்தார்கள். பிறகு அறிவித்தார்கள். அவர் சிகிச்சையிலும், மரணத்திலும் மர்மம் இருப்பதாக நாம் காண்கிறோம். அவர் மறைவுக்கு முன் அதிமுக எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வத்தை தலைவராக தேர்வு செய்துவிட்டு மறைவு செய்தியை அறிவித்து இரவு 12 மணிக்கு பதவியேற்றுக் கொண்டனர்.