`பாகுபலி’ படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நடித்த பிரபாசை திருமணம் செய்ய இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகின. இதற்கு காரணமாக இருந்த தன்னுடைய உதவியாளர்களில் ஒருவரை அனுஷ்கா நீக்கியதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் யார்

`பாகுபலி’ படத்தில் நடித்ததற்காக மிகப்பெரிய பாராட்டு பெற்றவர் அனுஷ்கா. அவரை ரசிகர்கள் மட்டுமல்ல திரை உலகினரும் பாராட்டி உள்ளனர்.
ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் அனுஷ்கா பற்றி ஏதாவது `கிசு கிசு’ கிளம்பும்.

ஏற்கனவே, இவர் படங்களில் இணைந்து நடித்த நாயகர்கள் ஆர்யா, ராணா, நாகர்ஜுனா, இயக்குனர் கிரிஷ் ஆகியோருடன் இணைத்து பேசப்பட்டார்.
அந்தந்த கால கட்டங்களில் அவர்களை அனுஷ்கா திருமணம் செய்யப்போவதாக புரளிகள் கிளம்பின.

இப்போது `பாகுபலி’ படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நடித்த பிரபாசை அவர் திருமணம் செய்ய இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகின. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அனுஷ்கா துப்பு துலக்கியபோது அதற்கு காரணம் தன்னுடைய உதவியாளர்களில் ஒருவர் என்று கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. தற்போது அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.