டெல்லி: கடந்த இருநாட்கள தமிழக முன்னாள் முதல்வர் ஒ. பன்னேர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தது பேசினார்.

அதிமுகவினர் பதவிக்காகவே டெல்லிக்கு படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து சிவகாசியில் இன்று செய்தியாளர்களிடம் கனிமொழி கூறுகையில், ”ஸ்டாலின் முதல்வர் கனவு காண்பதாக ஓபிஎஸ் கூறுகிறார். தேர்தல் வந்தால் யார் முதல்வர் கனவு காண்கிறார் என்பது தெரிந்து விடும்.

அதிமுகவில் சில பேர் தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக டெல்லிக்குப் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சில பேர் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக டெல்லிக்குப் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுகவின் இரு அணியினரும் இதையே மாற்றி மாற்றி செய்கிறார்களே தவிர, மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதில்லை” என்று கனிமொழி கூறினார்.