டெல்லி: தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடம் நடைபெற்றது. சந்திப்பின் போது ஒ. பன்னீர்செல்வம் அவரது ஆதரவு எம்.பி.க்கள் டாக்டர் மைத்ரேயன், அசோக்குமார் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் கூறும் போது அரசியல் ரீதியாக பிரதமரிடம் எதுவும் பேசவில்லை  ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம் என்றார்

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில்  பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு பின் முடிவெடுக்கப்படும் என கூறி உள்ளார்.

பின்னர் புதிதாக போடபட்ட டுவிட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு பிறகுதான் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி பற்றி  சிந்திப்போம்  என்பதையே நான் குறிப்பிட்டு உள்ளேன் என கூறி உள்ளார்.