தமிழகத்தில் இதுவரை 80 லட்சத்து 16 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப் பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கை ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார்.

அப்போது, தினந்தோறும் 4 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதாக காமராஜ் கூறினார். ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாக 973 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், துறைசார்ந்தவர்கள் கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்