சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களா அரசியலுக்கு வருவது குறித்து ஒரிரு வார்த்தைகள் பேசிவருகிறார். அவரின் அரசியல் சார்ந்த கருத்திற்கு எதிர்ப்பும் அவரது ரசிகர்களின் மத்தில் அவதரவும் பெரிகிவருகிறது.  தமிழக அரசியல்வாதிகள் அனைவருக்கும் ‘ரஜினி ஜூரம்’ பிடித்துவிட்டதாக டுவிட்டரில் கருத்துக்கள் பரவிவருகிறது.

ரஜினியின் அரசியல் வருகை குறித்து கருத்து கூறிய திருமாவளவன், ரஜினி கூறியது போல தான் தலித்துக்களுக்கு மட்டும் போராடவில்லை என்றும் ஒட்டுமொத்த தேச மக்களின் நலனுக்காக, தான் போராடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் 40 வருடங்களாக தமிழக பிரச்சனைகளை உற்று நோக்கி வரும் ரஜினிகாந்த், அரசியலுக்கு வந்தால் சிறப்பாக செயல்படுவார் என்றும்  ரஜினி அரசியலுக்கு வந்தபின்னர் காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது அவரது அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.