Tamil Nadu Election Commission, Tamil Nadu Election Commissioner Name 2017, Tamil Nadu Election Voter List, Election Id Card Status, Tamil Nadu Election Commission Voter Id, Tamil Nadu Election Commission Voter List 2017, Tamilnadu Election Commission Voter List 2016 With Photo, Tn Election Card, Tamilnadu Election Commission Voter List 2017 With Photo

தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவற்றுக்கான தேர்தல் நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை 15 நாட்களுக்குள் வெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி ‘தமிழ்நாடு பொது நல வழக்குக்கான மையம், மதுரை’ சார்பில் கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

தமிழ்நாட்டில் தொகுதி மறுவரையறை தொடர்பான வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. 1991 மக்கள் தொகை கணக்கின்படி முன்பு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. தற்போது 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.

எனவே, இந்த வழக்கை தொகுதி மறுவரையறை கோரி தி.மு.க. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்துள்ள வழக்குடன் இணைத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்

இவ்வாறு தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடப்பட்டது.