கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த இந்திய மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். படகு பழுது காரணமாக நின்ற ஜஸ்டீன் என்பவரது படகில் இருந்த 10 மீனவர்களை சிறைபிடித்து காங்கேசன் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

இன்று டெல்லியில் மீனவ பிரதிநிதிகள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திக்க உள்ள நிலையில், இலங்கை கடற்படையினரின் செயல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மார்ச் 6-ம் தேதி மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் இலங்கை கடற்படையின் அட்டுழியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.