Padmavati, Padmavati Story, Padmavati History, Padmavati Cast, Padmavati Release Date, Padmavati Movie, Padmavati Movie Story, Padmavati Movie Cast, Padmavati Songs
வரலாற்று உண்மைகள் அழிக்கப்பட்டால் ‘பத்மாவதி’ திரைப்படத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என சிவராஜ் சிங் சவுகான் கூறிஉள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் தயாராகி உள்ள பத்மாவதி திரைப்படத்தை அடுத்த மாதம் 1–ந் தேதி திரைக்கு கொண்டுவர முடிவு செய்து அதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்று பா.ஜனதா, ராஜபுத்ர சேனா, கர்னி சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் இருந்து மானத்தை காப்பாற்ற 12 ஆயிரம் பெண்களுடன் தீயில் இறங்கி உயிர் நீத்தவர் ராணி பத்மினி.
ஆனால் பத்மாவதி படத்தில் அலாவுதீன் கில்ஜியை, ராணி பத்மினி காதலிப்பதுபோல் தவறாக காட்சிப்படுத்தி உள்ளனர் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
இப்படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும், அவரது தலையையோ அல்லது படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இதையடுத்து தீபிகா படுகோனேவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவரது வீட்டிலும் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
அரியானா மாநில பாரதீய ஜனதாவின் தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சுராஜ் பால் அமு, தீபிகா படுகோனே, பன்சாலி தலையை எடுப்பவர்களுக்கு ரூ. 10 கோடி பரிசு வழங்கப்படும் என கூறிஉள்ளார். ‘‘தீபிகாவை உயிருடன் கொளுத்தினால் ரூ.1 கோடி பரிசு’’ என அகில பாரதீய சத்ரிய மகாசபா அறிவித்து உள்ளது. ராஜஸ்தான், உத்தரபிரதேச அரசுக்களும் எதிர்ப்பு தெரிவித்தது, இதனையடுத்து பத்மாவதி திரைப்படம் வெளியிடும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் வரலாற்று உண்மைகள் அழிக்கப்பட்டால் ‘பத்மாவதி’ திரைப்படத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என சிவராஜ் சிங் சவுகான் கூறிஉள்ளார்.
சிவராஜ் சிங் சவுகான் தன்னுடைய வீட்டில் ராஜபுத்ர சமுதாயத்தை சேர்ந்தவர்களை சந்தித்து பேசினார். அவர்களிடம் பேசிய சிவராஜ் சிங் சவுகான்,  வரலாற்று உண்மைகள் திரிக்கப்பட்டால் அதனை சகித்துக் கொள்ள முடியாது. வரலாற்று உண்மைகள் சிதைக்கப்பட்டு உள்ளது என்ற ஒரே குரலே நாடு முழுவதும்  ஒலிக்கிறது. ராணி பத்மாவதியின் கெளவுரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்று இருந்தால் படத்தை மத்திய பிரதேசத்தில் திரையிட அனுமதிக்கப்படாது என சிவராஜ் சிங் சவுகான் கூறிஉள்ளார்.
.