மருத்துவ முகாமிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை: கமலஹாசன்

Actor Jai, Jai Movies, Jai Age, Actor Jai Family Photos, Jai Movies 2017, Jai New Movie, Actor Jai And Anjali Love Story, Actor Jai Marriage, Actor Jai Caste

நடிகர் கமலஹாசன் இன்று தனது 63 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக கமல் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால் மக்கள் நற்பணி மன்ற பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அவர் புதிய மொபைல் ஆப் ஒன்றை இன்று அறிமுக செய்ய உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இலவச மருத்துவ முகாமை கமல் துவக்கி வைத்தார். மருத்துவ முகாம் துவக்க விழாவில் பேசிய கமல், மழை நீரை வெளியேற்றும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

Actor Jai, Jai Movies, Jai Age, Actor Jai Family Photos, Jai Movies 2017, Jai New Movie, Actor Jai And Anjali Love Story, Actor Jai Marriage, Actor Jai Caste ஆனால் மழை காலம் என்பதால் பல்வேறு நோய்கள் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ உதவி அவசியம் என நாங்கள் நினைக்கிறோம். அதனால் இந்த மருத்துவ முகாமை ஏற்பாடு செய்துள்ளோம். மக்கள் நற்பணி மன்றத்தினருக்கு மருத்துவ முகாம் நடத்துவதில் முன்அனுபவம் உள்ளது.

மருத்துவ முகாமிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை

தமிழகம் முழுவதும் இன்று மருத்துவ முகாம் நடந்து வருகிறது. சுமார் 550 இடங்களில் மருத்துவ முகாம் நடக்கிறது. மருத்துவ முகாம் நடத்துவதற்கும் அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. நலத்திட்ட பணிகளுக்காக அரசியலை பயன்படுத்திக் கொள்வோம். எங்கள் பணிகள் அமைதியாக நடந்து வருகின்றன. முடிந்தவரை உதவ வேண்டும் என்பதற்காக மருத்துவ முகாமை தொடங்கி வைக்கிறோம். மக்களை பாதுகாக்க வேண்டும். கனவுகளில் இருந்து தான் பல கண்டுபிடிப்புக்கள் நடக்கின்றன. பெரிய விஞ்ஞானிகளின் கனவுகள் தான் நனவாகின்றன. மருத்துவ முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.