சென்னை: இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விடுத்த அறிக்கையில் ‘ரஜினி’ ரசிகரகள் கட்டுப்பாடு மீறி நடந்து கொண்டால் ரசிகர் மன்றத்திலிருந்து நீக்கப்படுவீர்கள் என நடிகர் ரஜினிகாந்த் எச்சரித்துள்ளார்.

கடந்த மே 15 முதல் 5 நாட்கள் ரசிகர்களை சென்னையில் உள்ள தனது ராகவேந்திரா மண்படத்தில் சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ பர்ஸ்ட் லுக் வெளியீடு

பிறகு சென்னை மற்றும் ஒரு சில பகுதில் ரஜினியின் உருவ பொம்மையை வீரலட்சுமியின் அமைப்பினர் எரித்தனர். பதிலுக்கு ரஜினி ரசிகர்களும் வீரலட்சுமியின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் நேற்று ஒரு அறிக்கை வௌியிட்டுள்ளார். அதில், ‘ரசிகர் மன்றத்தின் கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்திற்கும் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் நிர்வாகிகள், மன்ற உறுப்பினர்கள் நீக்கப்படுவார்கள். அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து அவர்களை நீக்க தலைமை மன்ற நிர்வாகி சுதாகருக்கு அதிகாரம் அளிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டதாலேயே ரஜினி இவ்வாறு எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.