இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தின் பணிகள் முடிந்து  திரையிடுவதற்கான  தேதிக்காக காத்திருக்கின்றது.

எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரபல இயக்குனர் கவுதம் மேனனின் ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளதாக இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இதுகுறித்த புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

எனவே அடுத்த மாதம் இந்த படம் வெளிவருவது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படம் சென்சார் செய்யப்பட்டு ‘யூ/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.