சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ள ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மற்றும் ‘காலா’ படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தைத் அடுத்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்ட் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்துக்கு ‘காலா’ என பெயரிட்டுள்ளார்கள். காலா படப்பிடிப்பு வருகிற 28-ம் தேதி முதல் தொடங்க திட்டமிட்டுள்ளது.

‘காலா’ படத்தில் ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி அகியயோர்களும், சந்தோஷ் நாராயணன் இசை, எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளராக முரளி, சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன்.

‘காலா’ படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய லோகோ மட்டும் அடங்கிய போஸ்டர்களை இன்று காலை தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் மூன்று மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது உறுதியாகி இருக்கிறது.

மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக தனுஷ் அறிவித்திருந்தார். இந்நிலையில் ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டார். இப்போஸ்டர்களில் ‘கரிகாலன்’ என்ற ரஜினி கதாபாத்திரத்தின் லுக் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.