நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிக்கை கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் விருப்பம். அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. அரசியலுக்கு வர அவருக்கு உரிமை உள்ளது. ஆனால், ரஜினி அரசியலுக்கு வந்தால் மிகப் பெரிய மாற்றம் வருமா, வராதா என்று சொல்ல முடியவில்லை.

ரஜினிகாந்த் அரசியலுக்கு லாயிக்கில்லை: சுப்பிரமணியம் சுவாமி

அரசியல் அடித்தளம் சீர்கெட்டுவிட்டது என்று ரஜினி இப்போதுதான் சொல்லி இருக்கிறார். எங்களுக்கு எப்போதோ தெரியும். அவர் இப்போதாவது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டுமென்றால் ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என்பதை நண்பராக இந்த வேண்டுகோளாக வைக்கிறேன். ஏனென்றால், தமிழகத்தில் எல்லா சமயத்தைச் சார்ந்தவர்களுக்கும் அவர் அரசியல் என்ற சிறு வட்டத்துக்குள் தன்னை அடைத்துக்கொள்ளக் கூடாது” என்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.