அனுஷ்கா பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் பிரபாஸ், ராணா, தமன்னா உள்ளிட்டோர் சேர்ந்து நடித்துள்ளனர். பாகுபலி 2 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதில் அனுஷ்கா மகிழ்ச்சியில் இருக்கிறார்

அனுஷ்கா, பிரபாஸ் இருவருக்கும் 30 வயதை தாண்டினாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. திரையில் ஜொலிக்கும் ஜோடி நிஜ வாழ்வில் இணைந்தால் அருமையாக இருக்கும் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனுஷ்காவிடம் பிரபாஸ், ராணா இருவரில் யார் ஆணழகன் என கேட்கப்பட்டது. யாரை அனுஷ்கா தேர்ந்தெடுப்பார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க, பிரபாஸ் தான் ஆணழகன் என அசால்ட்டாக சொல்லிவிட்டார் அனுஷ்கா.

ராணா என்னை எப்பொழுதுமே பிரதர் என்று தான் அழைப்பார். பதிலுக்கு நானும் அவரை பிரதர் என்றே அழைப்பேன் என்றார் அனுஷ்கா

அனுஷ்கா பாகுபலி படங்களுக்கு முன்பாக பில்லா, மிர்ச்சி ஆகிய படங்களில் பிரபாஸுடன் சேர்ந்து நடித்துள்ளார்.