சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக தயாராகிக்கொண்டிருக்கிறது சங்கமித்ரா திரைப்படம். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

சங்கமித்ராவில் இருந்து நடிகை ஸ்ருதிஹாசன் விலகியுள்ளார் என தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

‘சங்கமித்ரா’: ஜெயம் ரவியின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு

சங்கமித்ரா ஆரம்ப விழா பிரான்ஸின் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெற்றது. 300 கோடி ரூபாய்க்கும் மேலான பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இப்படத்தற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

ரூ.500 கோடியில் பிரம்மாண்டமாக படமாகும் ராமாயணம்

இந்நிலையில், சில தவிர்க்கமுடியாத காரணங்களால் இப்படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகுவதாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.